
மதுரை மாவட்டத்திலுள்ள நீரேத்தான் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செல்வம் வாடிப்பட்டி ரயில்வே நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஓடைக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்வத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.