விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் அது வெடிக்கும் என ஒருவர் சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். உடனே போலீசார் மோப்ப நாய் உதவியுடன் விழுப்புரம் பேருந்து நிலையம் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

இதனையடுத்து கைபேசி எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் அகரம் பாடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விமல் ராஜ் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஒரு முறை மதுபோதையில் விமல் ராஜ் மோட்டார் சைக்கிளில் வந்தார். அந்த மோட்டார் சைக்கிளுக்கான எந்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால் போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதனால் போலீசாரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் விமல் ராஜ் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்