தெலுங்கு சினிமாவில் புதியவர்களின் பங்களிப்பில் நல்ல படைப்புகள் வெளியாகும் போது அதுபற்றி தன் பாராட்டை வெளிப்படுத்த தயங்காதவர் தான் நடிகர் மகேஷ்பாபு. அண்மையில் ரைட்டர் பத்மபூஷன் என்ற படத்தை மகேஷ்பாபு பார்த்துள்ளார். அப்படம் தொடர்பாக வியந்து தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளதோடு கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் எனவும் குறிப்பிட்டுள்ளார் மகேஷ்பாபு.

இதுபற்றி அவர் கூறியதாவது, ரைட்டர் பத்மபூஷன் திரைப்படத்தை மிகவும் என்ஜாய் செய்து பார்த்தேன். மனதை தொடும் ஒரு படம். ஆகவே குடும்பத்துடன் அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம். குறிப்பாக நடிகர் சுகாஷின் நடிப்பு என்னை கவர்ந்து விட்டது. இப்படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என மகேஷ்பாபு குறிப்பிட்டுள்ளார்.