இளைஞர்களின் உடல் திறனை மேம்படுத்தவும், சமுதாயத்தில் நிலவும் தவறான பழக்கவழக்கத்தில் இருந்து விடுபடவும் கைப்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டி கூடலூர் 1-ஆம் மைல் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் நடந்தது. 25 அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியை விளையாட்டு வீரர் சிவா கொடியேற்ற, நகராட்சி தலைவர் பரிமளா, துணை தலைவர் சிவராஜ் ஆகியோர் இப்போட்டியை தொடங்கி வைத்தனர்.

மேலும் மாவட்ட அளவிலான  இறுதிப் போட்டியில் பாரம் மற்றும் கோத்தகிரி அணிகள் மோதியதில், கோத்தகிரி அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 12-ஆம் தேதி மாநில அளவிலான கைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றதில், கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக அணிகள் மோதியது. பின்னர் இறுதி போட்டியில் தமிழக அணியே வெற்றி பெற்று, சுழற்கோப்பையை தட்டியது. இந்நிகழ்வில்  விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.