
இந்தியாவின் பாரம்பரிய உணவு முறையை வெளிநாட்டவர்கள் பலரும் இன்று சாப்பிட விரும்புகிறார்கள். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கு வருவதை விட நமது நாட்டின் உணவு முறைகளை பற்றி தெரிந்து கொள்வதற்கே அதிகம் விருப்பப்படுகிறார்கள். இதுபோன்று சமீபத்தில் தென் கொரியா நாட்டை சேர்ந்த பெண்மணி ஒருவர் இந்தியாவின் இனிப்பு வகைகளில் ஒன்றான குலோப் ஜாமுனை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்த வீடியோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவில் தென் கொரிய நாட்டைச் சேர்ந்த கெல்லி கொரியா கிண்ணத்தில் கொடுக்கப்பட்ட குலோப் ஜாமுனை ஆர்வமாக சாப்பிடுகிறார். குலோப் ஜாமுனை பாதியாக வெட்டி சாப்பிட சிலர் கூறுகின்றனர் அதேபோன்று அவரும் பாதியாக வெட்டி எடுத்து வாயில் வைத்து பார்த்துவிட்டு மிகவும் ருசியாக, மிருதுவாக உள்ளது என கூறுகிறார். எனக்கு இந்த இனிப்பு வகை மிகவும் பிடித்துள்ளது என கூறினார். தென் கொரியப் பெண் குலாப் ஜாமுனை ரசித்து சாப்பிட வீடியோ தற்போது வைரலாகி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
View this post on Instagram