ஒரு பக்கம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், மறுபக்கம் தேர்தல் முடிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாகத் தமிழகத்தில் முதன்முறையாகத் தேர்தலைச் சந்தித்த ‘தளபதி’ விஜய்யின் தமிழக வெற்றி கழகம், 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

விஜய்யின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, அவர் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் ஐபிஎல் நட்சத்திரங்களும் இணைந்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி, விஜய்யின் வெற்றியைச் சிறப்பிக்கும் வகையில் அவருடன் இருக்கும் பழைய புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து ‘அண்ணா’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

தான் ஒரு தீவிர விஜய் மற்றும் ரஜினிகாந்த் ரசிகன் என்பதை வருண் சக்கரவர்த்தி மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் ஃபார்ம் இன்றித் தவித்த வருண், தற்போது அதிரடியாகப் பந்துவீசி விக்கெட்டுகளைக் குவித்து வருகிறார்.

சமீபத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு ஆட்டநாயகன் விருதையும் வென்று அசத்தியுள்ளார்.