நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடி தான் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் விஜய் சேதுபதி. இவர் அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களை பெற்றார்.

தற்போது இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய்சேதுபதி சுட்டிக் குழந்தையுடன் உரையாடும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.