பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் முடி சூட்டு விழாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரியமான விஷயத்தை கைவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டின் மன்னரான மூன்றாம் சார்லஸ், அவரது மனைவி கமிலா இருவரும் வரும் மே மாதம் ஆறாம் தேதி அன்று முடி சூட்டு விழா நடத்தவிருக்கிறார்கள். அதில் பல நூற்றாண்டுகளாக மன்னர்கள் பதவியேற்கும் சமயத்தில் உடுத்தப்படும் பாரம்பரியமான அரச உடையை அணியக்கூடிய பழக்கத்தை மன்னர் கைவிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ சீருடையை அவர் அணிவார் என்று கூறப்பட்டிருக்கிறது. மூத்த உதவியாளர்களுடன் கலந்துரையாடிய பின் மன்னர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முடிசூட்டு விழாவை தொடர்ந்து பல நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளது. முடி சூட்டு விழா நடக்கும் போது, அதில் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் யாரெல்லாம்  பங்கேற்பார்கள் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.