தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் அண்மையில் தசரா திரைப்படம் வெளியாகி 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றி பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் சைரன், மாமன்னன், ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் ஜூன் 29-ல் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது தன்னுடைய மனைவிக்கு பிறகு நான் பார்த்த அழகான பெண் கீர்த்தி சுரேஷ் தான் என்று போனி கபூர்‌ கூறியுள்ளார். மேலும் துணிவு, வலிமை போன்ற படங்களை தயாரித்துள்ள போனி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.