செய்தியாளர்களிடம் பேசிய பழ. கருப்பையா, முல்லை பெரியாரின் நீர்மட்டத்தை ஏற்றாதே என்று அங்குள்ள சிபிஎம் சொல்லுகிறான். ஏற்று என்று இவன் சொல்கிறான். என்ன தேசியம் ? உங்களுக்கு எதுக்கு தேசியம் ? கம்யூனிஸ்ட் கட்சியும் சரி.. பாஜகவும் சரி… இவர்களுக்கு நதிநீர் பிரச்சனை தீர்வு காண தெரியவில்லை. இங்கே உள்ளவன் தண்ணீரை வீடு என்று சொல்ல வேண்டியது.

அங்கே  இருப்பவன் தண்ணீர் விடாதே என்று சொல்ல வேண்டியது. இதனால் என்ன பயன் என்று நான் கேட்கின்றேன் ? சுயேசையான…. நீதிமன்றத்தை நீதிபதிகளை போல….. நியாயம் தெரிந்த அமைப்பாளர்களை அமைத்து,  அவர்கள் கையில் அந்த சாவியை கொடுக்க வேண்டும். கொடுத்தால் இது தீரும்.

கூட்டணி கட்சியில் அடுத்த முறை நாங்கள் ஆட்சிக்கு வருகின்ற போது நதிநீர் பிரச்சனையில் சிக்கல் ஏற்படாமல் தீர்ப்போம் என்று சொல்ல இவர்களுக்கு யோகிதை இல்லை. ஆகவே தீர்வு என்பது பொதுவான அமைப்பின் கீழே…. அதிகாரிகள் மோடிஜி கட்டுப்பாட்டுக்கு  கட்டுப்பட்டவர்களாக இருக்க கூடாது . தேர்தல் கமிஷன் உடைய ஆட்களையே மோடிக்கு கட்டுப்பட்டவர்களாக போடுகின்றார்கள்.

ஆகவே அப்படி அல்லாமல் நியாயமான அமைப்பின் கீழ் கொடுக்கப்படுகின்ற நிலையை எங்களுடைய கூட்டணி அரசு உண்டாக்கும் என்று இவர்கள் சொல்ல வேண்டும். அவர்கள் அதை சொல்லவில்லையே. அதைப் பற்றிய பேசவில்லையே. 75 ஆண்டு காலமாக நீங்கள் காவேரி நீரின்  பிரச்சினையை தீர்க்கவில்லை.  இன்னும் எவ்வளவு காலம் எடுத்துக் கொள்வீர்கள்? என தெரிவித்தார்.