இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்கும் நோக்கில் பாகிஸ்தான் இன்று  (பிப்ரவரி 5) காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது. மேலும் காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த தினத்தை அனுசரிக்கிறது. எனவே இந்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டில் இன்று பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது.

இவ்வாறு பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள இந்த  சதித்திட்டம் குறித்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து கூறியுள்ளதாவது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் (இந்தியா தவிர) தங்கள் நாட்டின் தூதரகங்களுக்கு ரகசிய தகவல் அனுப்பியுள்ளது. இத்தகவலை தூதரகங்களுக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை இமெயில் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக  என இந்திய உளவுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் உலகம் முழுவதும் உள்ள தங்கள் தூதரகங்களுக்கு ஒரு ரகசிய உத்தரவிட்டுள்ளது. அதன்படி பல்வேறு நாடுகளில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்திய பாதுகாப்பு படைக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.