தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்கும் நிலையில் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதேபோன்று நடிகர் கார்த்தி தற்போது ஜப்பான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜப்பான் திரைப்படமும் மாவீரன் திரைப்படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி இரு படங்களும் ஜூன் 29-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் கார்த்தியின் தம்பி மற்றும் ஹீரோ படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. கடந்த வருடம் தீபாவளி பண்டிகையின் போது கார்த்தியின் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் ஆகிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனது. இதைத்தொடர்ந்து தற்போது 3-வது முறையாக கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் கடந்த முறை பிரின்ஸ் திரைப்படம் தோல்வியடைந்த நிலையில் சர்தார் திரைப்படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்திருந்தது. இதனால் தற்போது மாவீரன் மற்றும் ஜப்பான் ஆகிய 2 திரைப்படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.