
செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நான் என்ன கேட்கிறேன்… இப்ப கூட நான் சொல்ல விரும்புவது.. அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து விலகி இருப்பது அண்ணாமலை பேசிய பேச்சை மட்டுமே மையமாக வைத்து விலகி இருப்பது போதுமா ? என்பது தான் கேள்வி.
பாஜகவுடைய கொள்கைகளை பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை. நாட்டுல ஒரு நாடு – ஒரு தேர்தல் என்று அறிவிப்பதை பற்றி எந்த கவலையும் இல்லை. குடியுரிமை சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதை பற்றி எந்த கவலையும் இல்லை. சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியல் பேசுவதை பற்றிய கவலை இல்லை.
மாநில உரிமைகளை பறிப்பதை பற்றியோ… காவேரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கும் – தமிழகத்திற்கும் சண்டையை மூட்டி விட்டு இருக்கும் பாஜக நடவடிக்கை பற்றி கவலையில்லை. இப்படி பாஜக பற்றி நூற்றுக்கணக்கான பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு பிரச்சனை இல்லை.
அண்ணாமலை பேசுவது மட்டும் தான் எங்களுக்கு பிரச்சினை என்றால் ? அது நாளைக்கு அவங்க தான் தீர்மானிக்கணும். அதை மட்டுமே வச்சு ஒரு கூட்டணியை முறிக்க முடியுமா ? அதை வைத்து அந்த கூட்டணியை முறிச்சா நியாயமா இருக்காமா ? அது பொருத்தமானதாக இருக்குமா ? என்பது பற்றி அவங்க தான் தீர்மானிக்கணும். அவங்க தான் விளக்கம் சொல்லணும் என தெரிவித்தார்.