சித்தார்த் நடித்துள்ள சித்தா திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் இல்லாமல் கர்நாடகா,  மலையாளத்தில் கேரளா,  ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கான பிரமோஷனுக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு சென்று இருந்தார். பெங்களூருவில் இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இந்த படத்துக்கான பிரமோஷன் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போதே திடீரென்று உள்ளே கன்னட அமைப்பினர் சிலர் சித்தார்த்துக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

தமிழகம் -கர்நாடகம் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பல்வேறு பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கிறது. இதில் கன்னட திரைத்துறை சார்ந்த நடிகர்கள் பலர் காவேரி நீர் சம்பந்தமான கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் திரைத்துறை மட்டுமல்லாமல் சமூக நோக்கம் கொண்ட பல கருத்துக்களை நேரடியாகவும்,  துணிச்சலாகவும் பேசக்கூடிய நடிகர்.

சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துகளை பேசுவதற்காக பல எதிர்ப்புகளையும் இதற்கு முன் சித்தார்த் சந்தித்து இருந்தார். இந்த நிலையில் தமிழக திரைப்படம் கர்நாடகாவில் பிரமோஷன் நடப்பதனால் அந்த இடத்தில் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேடையில் சித்தார்த் பேசிக் கொண்டிருக்கும் போதே நிகழ்ச்சியை நிறுத்துமாறு அவர்கள் சொல்லியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, சித்தார்த் மேடையில் இருந்து வெளியேறினார்.