ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாறி மாறி தங்களுக்கு எதிராக போட்டியிடும் கட்சியினரை நோக்கி தங்களது வாதங்களை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்பி கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் இவ்வாறு பேசினார். அதில், எங்கேயோ இருந்து ஏதோ பழைய ஆபிஸர்கள் கொண்டு வந்து இங்கே போட்டு பிஜேபி ஏதோ ஆட்சியை புடிச்சிடலாம் னு  நினைக்கிறாங்க.

ஆனால் முன்னாடி அவங்க அந்த  இடத்துல என்னென்ன பண்ணி இருக்காங்கனு  நமக்கு தெரியும். அண்ணாமலனு ஒருத்தர் இருக்காரு. அவரு இப்போது  என் மண் என் மக்கள்-னு லாம்  சொல்றாரு. ஆனா கர்நாடகாவில் இருக்கும் போது நான் தமிழன் இல்லை. நான் கன்னடக்காரன் தான். என்  கடைசி மூச்சிருக்கும் வரை என்னை கன்னடியன் என்று தான் நீங்கள் அழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது  ஏன் கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார்.  பெங்களூர், மைசூர்  சென்று  நிற்க தேர்தலில் வேண்டியதுதானே. தேர்தலுக்கு அப்புறம் கண்டிப்பாக  காணாமல் போயிடுவார் கவலைப்படாதீங்க. என பேசியிருந்தார்.