பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் விவசாய சட்டங்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் வெளியிட்டார். அவர் கூறியது, விவசாயிகளே மீண்டும் அந்த சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் மத்தியில் எதிர்ப்பை தூண்டும் விதமாக அமைந்தது எனவே அவர் கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு எழுந்தது.

பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் கவூரவ் பாட்டியா, “கங்கனாவின் இந்த கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், விவசாய சட்டங்கள் குறித்து கங்கனா கூறிய கருத்துகள் தற்போது அரசியல் களத்தில் விவாதங்களை ஏற்படுத்தியது அதனை தொடர்ந்து தான் கூறிய கருத்து யாருடைய மனதையும் துன்புறுத்திருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கூறியதுடன் தனது கருத்தை திரும்ப பெறுவதாக கூறி மன்னிப்பு கோரினார்.