ஐபோன்-14 ப்ரோ மேக்ஸ் மிகவும் விரும்பப்படும் ஒரு பிரீமியம் போன் ஆகும். இருப்பினும் இதன் விலை அதிகமாக உள்ளதால் அனைவராலும் வாங்க இயலாது. தற்போது இந்த ஐபோனை வாங்குவதற்கு பம்பர் தள்ளுபடியானது கிடைக்க உள்ளது. அதன்படி, இதை வாங்க ரூ.40,000 வரை கொடுத்தால் போதும். இப்போனை ரூ.39,999 -க்கு வாங்கலாம் எனக் கூறி எம்.ஜே.சஹாப் என்ற பயனர் பேஸ்புக் மார்க்கெட்பிளேஸில் விளம்பரம் செய்து உள்ளார்.

அதோடு பயனர் ஹோம் டெலிவரி செய்யும் வாய்ப்பையும் வழங்கி இருக்கிறார். இந்த போனின் முழுமை மற்றும் நேர்த்தியை நிரூபிக்கும் விதமாக, இதற்கான பில்லும் வழங்கப்படும் என பயனர் கூறுகிறார். ஆன்லைனில் தொடர்புகொள்வதன் வாயிலாக இந்தப் பயனரை தொடர்புக்கொள்ளலாம். ஐபோன்-14 ப்ரோ மேக்ஸில் பயனர்களுக்கு 6.7 இன்ச் சூப்பர் ரெடினா AMOLED டிஸ்ப்ளேயானது கிடைக்கும். இச்சாதனம் A15 பயோனிக் சிப் உடன் வருகிறது. எனவே இதன் வேகத்தை பற்றி பயனர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.