BSNL அவ்வப்போது தன் வாடிக்கையாளர்களுக்கு மலிவு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அதிலும் குறிப்பாக சாமானியர்களும் எளிதாக வாங்கும் அடிப்படையில் மலிவாக கிடைக்கும் BSNL திட்டங்களில் பல நல்ல அம்சங்களும் வசதிகளும் கிடைக்கிறது. தற்போது மிகக் குறைந்த விலையில் பல நன்மைகளை அளிக்கும் BSNL ரீசார்ஜ் திட்டம் குறித்து நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம். BSNL தன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.269-க்கான மலிவான ரீசார்ஜ் திட்டத்தை அளிக்கிறது. இதில் தினமும் 2GP டேட்டா கிடைக்கிறது.

அதோடு இத்திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இத்திட்டத்தில் எல்லா நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற குரல் அழைப்புகளானது கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற தரவு வசதியானது இத்திட்டத்தில் இருக்கிறது. 2GB/day ஆனவுடன் வேகமானது 40Kbps ஆக குறையும். இதில் நாளொன்றுக்கு 100 SMS அனுப்ப முடியும்.

BSNL ட்யூன்ஸ், EROS Now, M/s ONE 97 கம்யூனி கேஷன்ஸ் லிமிடட் வழங்கும் ஹார்டி மொபைல் கேம்ஸ் சர்வீஸ், M/s On mobile Global Ltd வழங்கும் ப்ரோக்ரெசிவ் வெப்ஆப் (Progressive Web App(PWA))ல் சேலஞ்சஸ் அரேனா மொபைல் கேமிங் சர்வீஸ், M/s Tellyfonic Digital Media வழங்கும் “Lystn” மியூசிக் சர்வீஸ், M/s Ubarri Marketing Private Limited வழங்கக்கூடிய லோக்துன், ஜிங், ஆஸ்ட்ரோடெல் மற்றும் கேம்ஆன் சர்வீசஸ், M/S ADVYSORS INC வழங்கக்கூடிய GAMEIUM பிரீமியம் கேமிங் பயன்பாடு போன்ற அம்சங்களானது கிடைக்கும்.