இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களில் ஒன்றாகிய வோடபோன் ஐடியா (Vi) தன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு புது ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புது திட்டத்தின் விலை வெறும் ரூ.181 மற்றும் இது 4G டேட்டா வவுச்சர் ஆகும்.

இத்திட்டத்தின் வாயிலாக பயனாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு (அ) ஆன்லைன் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதற்கு பெரும்பாலும் மொபைல் டேட்டாவைச் சார்ந்திருந்தால் அவர்களின் டேட்டா நுகர்வை அதிகரிக்க முடியும். புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய்.181 திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது.

இந்த திட்டத்தின் தினசரி செலவானது ரூ.6 ஆகும். இந்த திட்டத்தில் பயனாளர்கள் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டாவை பெறுவர். அதோடு உங்களுக்கு 4G டேட்டா அனுபவத்தை மட்டுமே தரப் போகிறது. தொலைத்தொடர்பு நிறுவனம் நீண்டகாலமாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. அதனை ஈடுசெய்யும் நோக்கில் புது ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டு வருகிறது.