1903-ம் ஆண்டு ஜூலை திங்கள் 15ஆம் நாள் விருதுநகரில் பிறந்தவர் காமராஜர். தனது 18 வயதில் அரசியலில் ஈடுபட்ட இவர் 12 முறை காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 4 முறை பாராளுமன்ற உறுப்பினராகவும், 3 முறை தமிழக முதலமைச்சராகவும் இருந்துள்ளார். அரசியலில் இருந்தும் சட்டைப்பை நிரம்பாத ஒருவர் என்றால் அது நாம் படிக்காத மேதை காமராஜர் தான். இவர் சில பொன்மொழிகளை மக்களுக்காக விட்டுச் சென்றுள்ளார். அவை,

உன் பிள்ளை உணமாகப் பிறந்தால் சொத்து சேர்த்து வை, ஆனால் சொத்து சேர்த்து பிள்ளை குணமாக்காதே.

எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை வரலாறு ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை.

ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கு கல்வி புகட்டுவதாகும்.