உலக இளைஞர் திறன் தினம் ஐநா சபையால் உருவாக்கப்பட்ட தினம் ஆகும். இந்த நாள் இளைஞர்களுக்கு அத்தியாவசிய திறன்களை கொடுப்பதன் முக்கியத்துவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டதாகும். 2014 ஆம் வருடம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி உலக இளைஞர் தினத்தை ஐநா சபை அறிவித்தது.

பாதிக்கப்படுபவர்களுக்கு பலன்களை அணுகுவதை உறுதி செய்யவும் பாலின சமத்துவமின்மையை நீக்கவும் உலக இளைஞர் திறன் தினம் ஊக்குவிக்கிறது. ஆனால் ஐநாவை பொருத்தவரை உலக இளைஞர் தினம் என்பது வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர், ஒழுக்கமான வேலை போன்றவற்றிற்கு தேவையான திறன்களை இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் வளர்க்க உதவுவதாகும்.

10ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள் கூட ஏதேனும் ஒரு திறனை வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேற இந்த இளைஞர் திறன் திட்டம் உதவும்.  அவ்வகையில் இந்தியாவில் இளைஞர்களுக்கு ஸ்கில் இந்தியா மூலம் பயிற்சிகள்  வழங்கப்படுகின்றது.