
கடல் நீர் மட்டம் உயர்ந்துக் கொண்டே வருவதன் மூலம் 90 கோடி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். கடல்மட்ட உயர்வு மற்றும் சர்வதேச அமைதி குறித்த மாநாட்டில் பங்குபெற்ற அன்டோனியோ குட்ரெஸ், புவி வெப்பமடைதல் குறைந்தாலும் கடலின் மட்டம் உயர்கிறது.
இதன் காரணமாக மும்பை உள்ளிட்ட உலகின் பல பெரிய நகரங்கள் பாதிப்புகளை எதிர்கொள்ளகூடும் என்று எச்சரித்துள்ளார். இதற்கிடையில் நீர்மட்டம் உயர்வதால் கெய்ரோ, பாங்காங், டாக்கா, ஐகார்த்தா, மும்பை, நியூயார்க் உள்ளிட்ட நகரங்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் எனவும் குட்ரெஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.