சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ் குமார், மற்றும் தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் அனிருத் இசையில் ஷில்பா பாடிய ‘காவாலா’ என தொடங்கும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.