உத்தரகாண்டின் ரிஷிகேஷ் நகரில் தபோவனம் பகுதியில் நடந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஒரு வாலிபர் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி சாலை வழியே இரவில் பயணம் மேற்கொள்கிறார். வீடியோவை வைரலாக்குவதற்காக அவர் இப்படி செய்துள்ளார். எனினும் அது சட்டவிரோதமான செயல் ஆகும். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது, சமூகஊடகத்தில் வீடியோ ஒன்று வைரலாகியது.

அதாவது, வாலிபர் ஒருவர் மது போதையில் காளை ஒன்றின் மீது அமர்ந்தபடி செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. அதன்பின் காவல்துறையினர் வாலிபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு வருங்காலத்தில் விலங்குகளிடம் இது போன்று தவறாக நடக்ககூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. இதனிடையே சிலர் இதனை ஜல்லிக்கட்டு போட்டியுடன் ஒப்பிட்டு சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு அந்த வாலிபர் எதுவும் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

https://twitter.com/uttarakhandcops/status/1655530072953212928?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1655530072953212928%7Ctwgr%5E5e7f672561167674e6a9d1ea3cd696f391775750%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FNews%2FIndia%2Fits-a-new-kind-of-jallikattu-a-bull-riding-drug-addict-viral-video-960585