
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பருவமழையை சமாளிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மழை, புயல், மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை அசம்பாவிதங்களைப் பற்றிய தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் வழங்க “TN ALERT” என்ற புதிய செயலியை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த செயலி மூலமாக, மக்களுக்குத் தேவையான முக்கிய தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகளை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். வடகிழக்கு பருவமழை தொடரும்போது, அவசர நிலைமைகளுக்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.