தமிழகத்தின் 17-வது சட்டமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் கூட்டத்தொடர், இன்று மே 11-ம் தேதி காலை கோட்டை வளாகத்தில் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளது.

தற்காலிக சபாநாயகராக  நியமிக்கப்பட்டுள்ள சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ கருப்பையா முன்னிலையில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிய உறுப்பினர்கள் அனைவரும் இன்று முறைப்படி பதவி ஏற்றுக்கொள்கின்றனர்.

ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், இன்று முதன்முறையாகச் சட்டமன்ற உறுப்பினராக அவைக்குள் அடியெடுத்து வைத்தது தொண்டர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தின் நிரந்தர சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை மே 12-ம் தேதி நடைபெற உள்ளது. புதிய உறுப்பினர்களின் வருகையால் தமிழகச் சட்டமன்றம் இன்று களைகட்டியுள்ளதுடன், கோட்டையைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.