
சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் கன மழை பெய்த நிலையில், தற்போது எந்த சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்காாமல் போக்குவரத்து சீராக இருக்கிறது. கணேசபுரம் சுரங்கப்பாதையில் மட்டும் மழைநீர் தேங்கியிருந்த நிலையில், அதுவும் தற்போது அகற்றப்பட்டதால் சென்னையில் 22 சுரங்கப்பாதையிலும் நீர் தேங்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.