​டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோரின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி ஆய்வு செய்தார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட அவர், பின்னர் விபத்தில் காயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். நாட்டின் தலைநகரில் இத்தகைய துயரச் சம்பவம் நடந்திருப்பதன் தீவிரத்தை உணர்ந்து, அமைச்சர் அமித் ஷா அவர்கள் டெல்லி காவல்துறை ஆணையர் மற்றும் தேசியப் புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு, இந்தச் சதிச் செயலின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.