சர்வதேச அளவில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் 3300 கிளைகளுடன் தனியார் நிறுவனமான ப்ரொபஷனல் கொரியர் நிறுவனம் செயல்படுகிறது. இதன் தலைமை அலுவலகம் சென்னையில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் படி நேற்று ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையை தொடர்ந்து இரண்டாவது நாளாக ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்தில் வருமானவரித்துறையினர் இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட ப்ரொபஷனல் கொரியர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.