திருச்சி தனியார் பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் 3 இடம்பிடித்த மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவின்போது சாமியான பந்தல் சாய்ந்து 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இதையடுத்து காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதினர். தற்போது மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..