தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்ற அதிமுக ஆட்சியில் அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளிலும் சோதனைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் அமலாக்கத்துறை கட்டுப்பாட்டிலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்ட நடவடிக்கைகள் வாயிலாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உறவினர்கள் முயற்சி செய்கின்றனர்.