
ஒருவர் காட்டிற்குள் மலையேற்றத்திற்காக காட்டிற்குள் நடந்து சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் கரடி ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்த அந்த நபர் கரடியிடம் இருந்து தப்பிப்பதற்காக மரம் ஒன்றில் ஏறுகிறார். அவரை பின்தொடர்ந்து கரடியும் மரத்தில் ஏறி அந்த நபரை பிடிக்க முயற்சி செய்கிறது. ஆனால் அவர் வேகமாக மரத்தின் மேல் ஏறி விட்டதால் கரடி கீழே இறங்கி விடுகிறது.
இது தொடர்பான காணொளி சிசிடிவி இடியட்ஸ் எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. ட்விட்டரில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் கேலியாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிலர் கேமரா எப்படி சரியான இடத்தில் பொருத்தப்பட்டது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Terrifying encounter between hiker and bear pic.twitter.com/zmBXDbJz6T
— CCTV IDIOTS (@cctvidiots) August 11, 2023