சென்னை அயனாவரம் லேப்டாப்புக்கு சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கியதில் பயிற்சி மருத்துவர் சரனிதா (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் உதயகுமார் நீண்ட நேரம் ஃபோன் செய்தும் அவர் எடுக்காத காரணத்தால், அவர் தங்கியிருந்த விடுதி நிர்வாகத்திற்கு ஃபோன் செய்து பார்க்குமாறு கூறியபோது, சார்ஜரை கையில் பிடித்தவாரே இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.