மைசூர்: 2023 தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கர்நாடக வனத்துறை சார்பாக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்பொழுது நட்சத்திர ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கினார். இந்நிலையில் அந்த ஹோட்டலில் தங்கியதற்கான கட்டணத்தில் 80 லட்சம் பாக்கி ஒரு வருடமாக செலுத்தவில்லை என்று அந்த ஹோட்டல் நிர்வாகம் குற்றச்சாட்டு வைத்துள்ளது. வாடகை செலுத்த தவறினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.