திமுக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்த மகளிர்களுக்கு உரிமை தொகையாக மாதம் 1000  ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் செப்டம்பர் 15ல் தொடங்க உள்ளது. முன்னதாக இது பற்றி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் செப்டம்பர் 11ஆம் தேதி இறுதி கட்ட ஆலோசனை நடத்துகின்றார். யார் யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற பட்டியல் தயாராகி விட்டதாகவும்,

அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில்,  விண்ணப்பம் செய்த சுமார் 5 லட்சம் பேரில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எனவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட 5 லட்சம் பேருக்கு மாதம் 1000  ரூபாய் கிடையாது. இது விண்ணப்பம் செய்த குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை  ஏற்படுத்தி உள்ளது.