
அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, சென்னை தமிழ் என்பது இங்கு சங்கமிக்கிறது. கடல் சங்கமிப்பது போல எல்லா தமிழும், ஆந்திரா, கன்னடா எல்லாம் சேர்ந்து இங்க ஒரு புது பாஷையாக உருவாகிடுச்சு. அருமை தம்பி ரவி என்ன ரொம்ப தூக்கு தூக்குன்னு தூக்கி வச்சுட்டாறப்பா… பார்த்தா சால்வையே போடுறாங்க…. போடுறாங்க… போட்டுட்டு இருக்காங்க. தம்பிக்கும் போடுறாங்க..
இது மாதிரி அன்பு பாசம் வைக்க ஒரு கட்சி என்றால் மனித புனிதன் புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கம் தான். அச்சம் என்பது மடமையடா, அஞ்சாமை திராவிடர் உடமையடா. அதுதான் நம் உயிர் மூச்சு. மாபெரும் சபையில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும். மாற்று குறையாத மன்னவன் என்று போற்றி புகழ வேண்டும் என்று போதித்த போதிதர்மர் உருவாக்கிய இயக்கம் தான் இந்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
எனக்கென்று குடும்பம் இல்லை, எனக்கென்று வாரிசு இல்லை, எனக்கு எல்லாமே தமிழ் மக்கள் தான் என்று பேசி, இந்த தமிழ் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற… மழை பெய்தாலும், நிலைகுலயாத மாணிக்க தலைவி… இந்திய திருநாட்டின் சிங்கப்பெண்மணி… வேஷ்டி கட்டிய ஆண்கள் மத்தியிலே… சேலை கட்டிய சிங்கப் பெண் நம் அம்மா வார்த்து எடுத்த இயக்கத்தை,
இன்னைக்கு அவர்கள் வழியில் கழகத்தை வழி நடத்திக் கொண்டிருக்கின்ற… அனைவரின் அன்பும், ஆசியும் பெற்றிருக்கக் கூடிய நம் மன்னன்…. ஏழைகளின் முதல்வன்… நாலரை ஆண்டு காலம் தமிழகத்தை ஆண்டாலும், நச்சின்னு மக்கள் மத்தியிலே பதிந்திருக்க கூடியவர் எடப்பாடி என தெரிவித்தார்.