நேற்றுடன் ஜூன் மாதம் முடிவடைந்த நிலையில், ஜூலை மாதம் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் தொடங்க உள்ளது. ஜூலை-1 (இன்று) முதல் உங்களுக்கு என்ன மாற்றங்கள் காத்திருக்கிறது என்பதை தற்போது தெரிந்துகொள்வோம். எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோக நிறுவனங்கள் வழக்கமாக மாதந்தோறும் முதல் தேதியன்று சமையல் எரிவாயுவின் விலையை மதிப்பாய்வு செய்து திருத்தம் செய்கிறது. அதன்படி, ஜூலை 1-ஆம் தேதி முதல் LPG விலையில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து ஆதாருடன் பான் எண்ணை இணைப்பதற்குரிய காலக்கெடு நேற்று ஜூன் 30, 2023 ஆகும். எந்தவொரு இணக்கமும் இல்லை எனில் ஜூலை 1, 2023 முதல் பான் செயலிழந்து விடும். ஆகவே குறிப்பிட்ட 2 ஆவணங்களையும் இணைக்கும் செயல்முறையை முடிக்கவேண்டியது மிகவும் அவசியம்.

மேலும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்குரிய காலக்கெடு ஜூலை மாதம் நெருங்குகிறது. உங்கள் ஐடிஆரை நீங்கள் இன்னும் தாக்கல் செய்யவில்லை எனில், ஜூலை 31-ம் தேதிக்குள் அதை முடிக்க வேண்டும்.

அதன்பின் எல்பிஜி விலைகளுடன் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளிலும் மாதத்தின் முதல் தேதி அதாவது ஜூலை 1-ம் தேதியில் மாற்றம் காணலாம். HDFC வங்கி மற்றும் HDFC இடையேயான இணைப்பு ஜூலை 1, 2023 (இன்று) முதல் நடைமுறைக்கு வரும் என HDFC குழும தலைவர் தீபக் பரிக் அறிவித்தார்.