கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ராகவா லாரன்ஸ் இதுவரை பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார். எஸ்.ஜே சூர்யாவும் தனது நடிப்பு திறமையை முழுவதுமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மலையாள நடிகர் ஷைன் டாம் சைக்கோ நடிகராகவும், அரசியல்வாதியாகவும் உள்ளார். அவருக்கு எதிராக இளவரசு அரசியல் செய்து வருகிறார். சைன் டாமின் சாம்ராஜத்திற்கு 4 ரவுடிகள் உறுதுணையாக இருக்கின்றனர். அதில் மதுரையில் இருக்கும் ரவுடிதான் லாரன்ஸ். அவரை தீர்த்து கட்ட ஆள் அனுப்பப்படுகிறது. சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டிய லாரன்ஸ் எஸ்.ஜே சூர்யாவிடம் சென்று தன்னை வைத்து ஒரு படத்தை இயக்க கூறுகிறார்.

ராகவா லாரன்சை தீர்த்து கட்ட போட்ட ஸ்கெட்ச் வொர்க் அவுட் ஆனதா? எஸ் ஜே சூர்யாவின் பின்புலம் என்ன? என்பது குறித்து அழகாக கார்த்தி படம் எடுத்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் சந்திரமுகி 2 ஆகிய படங்கள் தோல்வியடைந்த நிலையில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ராகவா லாரன்ஸுக்கு கம் பேக் திரைப்படம் என்று தான் சொல்ல வேண்டும்.

வழக்கம்போல எஸ்.ஜே சூர்யாவின் நடிப்பு அரக்கனை திரையில் பார்க்கலாம். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்திற்கு பிளஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. மதுரை மற்றும் காட்டுப்பகுதி என கேமராவின் ஒர்க் சிறப்பாக அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதியில் ரொம்ப ஸ்லோவாக கதை நகர்கிறது. ஆனால் இடைவெளிக்கு முன்பாக சூடு பிடிக்கும் படம் இறுதிவரை சூப்பராக இருக்கிறது.