இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரஜினிகாந்த் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் டைரக்டர் நெல்சனுக்கு ஜாக்கி ஷெராஃப் சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். அதன்படி ஜெயிலர் படத்தின் சூட்டிங் தளத்தில் ஜாக்கி ஷெராஃப் டைரக்டர் நெல்சனுக்கு ஸ்கூட்டர் ஒன்றை பரிசளித்திருக்கிறார். இந்த புகைப்படத்தை நெல்சன் தன் சமூகவலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளார்.