ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் JEE, NEET நுழைவுத் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கோட்டா நகரில் தங்கி இருந்து JEE தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது  நடப்பாண்டில் கோட்டா நகரில் நடந்துள்ள 13 வது தற்கொலையாகும்.

பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்திப் குமார் குர்மி கடந்த 2 ஆண்டுகளாக கோட்டார் அவரில் உள்ள மகாவீர் நகர் பகுதியில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை சந்திக்குமாரின் நண்பர் அவருடைய அறைக்குச் சென்றபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக பார்த்த போது சந்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.