செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எனக்கு தண்ணி தர மறுப்பான்….  என் கச்சதீவை எடுத்து கொடுப்பான்….  என் இன்னும் சாகும்போது ஈழத்துல அவனே கொன்னு குவிப்பான்…  அவனை நீ கூடவே வச்சுட்டு,  அவன கூட்டிட்டு….  நான் கூட்டணி கூட்டணின்னா…  நாங்க மானங்கெட்டு போயி,  உங்களுக்கு ஓட்டு போட்டு…  உங்கள வெல்ல வச்சிரணும்…  கேட்டா கோபப்படுறாரு….  ஆதங்கப்படுறேன்…. ஆவேசமா பேசுறாருன்னு…

ஏதோ ஒன்னு…  கண்ணு முன்னாடி எல்லாத்தையும் பாத்துட்டு சகித்துக்கொண்டு சகித்துக் கொண்டு போக முடியல. என்னைய வளர்த்தவன் அப்படி.  அதனால எனக்கு அந்த கோபம் இருக்க தான் செய்யுது. அதனால பேச தான் செய்யுறேன்.  நான் கேக்குறதுல ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்க… ஆனால் உண்மையிலேயே சொல்றேன்…

அம்மையார் ஜெயலலிதாவாக  இருந்தா…  இந்த மாதிரி நிலைமையில் கர்நாடகாவில் தண்ணீர் தரவில்லை என்றால் ? காங்கிரஸ் ஓட கூட்டணி வைக்கிற நிலைமை என்றால் ? வேணாம்…! வெளியே போடான்னு சொல்லி இருப்பாங்க. அதுல அந்த அம்மா கிரேட். நீங்க உங்க மாநில மக்களின் நலனுக்கு நீங்க நில்லுங்க… தூக்கி வீசுங்க அவனை என தெரிவித்தார்.