மின்சாரத்தை முறைகேடாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் மின் கணக்கீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட போது துண்டிக்கப்பட்ட காலகட்டத்தில் குறிப்பிட்ட தொகையை நுகர்வோர்கள் செலுத்த வேண்டும். ஆனால் தற்போது பயன்பாட்டில் உள்ள மின் இணைப்பு களுக்கான கட்டணத்தை மட்டுமே மென்பொருளில் பதிவு செய்ய மின்வாரியம் வழிவகை செய்துள்ளது. தற்போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கும் கணக்கீட்டை மேற்கொள்ள அண்மையில் நடைபெற்ற தகவல் தொழில்நுட்பம் மற்றும் வருவாய் பிரிவு ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரியம் அறிவுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து துண்டிக்கப்பட்ட மற்றும் பழுதான மீட்டர்களை கொண்ட இணைப்புகளுக்கும் மின் கட்டணத்தை பதிவு செய்யும் விதமாக எல்டி பில்லிங் மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்புகளுக்கான கணக்கிட்டு நாளன்று வழக்கம் போல மின் கட்டணத்தை மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் இதன் மூலமாக வாரிய விதியை செயல்படுத்துவதுடன் துண்டிக்கப்பட்ட இணைப்பில் இருந்து முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.