ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் ராணுவ வீரர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சரப்ஜீத்கூர் ,  மர்ஹீனில் உள்ள அவரது வீட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்: சரப்ஜீத் கூரின் கணவர், போபிந்தர் சிங் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டார். போபிந்தர் சிங் ஒரு ராணுவ வீரர். கொலை நடந்த அதே நாளில் தான் அவர் விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

குற்றத்தின் கண்டுபிடிப்பு: சரப்ஜீத் கூரின் உயிரற்ற உடல் சனிக்கிழமை காலை அவரது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, ராஜ்பாக் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

வாக்குமூலம்:  விசாரணையின் போது, கணவர் போபிந்தர் சிங் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.  காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, கொலையில் தனக்கு தொடர்பு இருப்பதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உறவினர்களிடையே ஒப்படைக்கப்பட்டது. குடும்ப வன்முறை எவ்வளவு பெரிய தாக்கத்தை நொடியில் ஏற்படுத்திவிடும் என்பதற்கு இத சம்பவம் சிறந்த உதாரணம்.