ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஒரு புதிய முயற்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணிப்பதை மேம்படுத்த புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளது. பெரும்பாலும் கைதானவர்கள் ஜாமீனில் வெளியில் வர நீதிமன்றத்தில் முறையிட்டு அதற்கான அனுமதியும் அவர்களுக்கு கிடைத்துவிடும். பின் ஜாமீனில்  விடுவிக்கப்பட்டவர்களைக் கண்காணிப்பதில் தொடர்ச்சியான சவாலை எதிர்கொள்ள, காவல்துறை ஒரு புதுமையான தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,

 GPS எனப்படும் கணுக்கால் வளையங்கள்,  குற்றவியல் வரலாற்றைக் கொண்ட சிறைவாசிகளை  தொடர்ச்சியாக கண்காணிக்க  அவர்களது கணுக்காலில் பொருத்துவதன் மூலம், அவர்களின் இயக்கங்கள் மீது முழு கவனம் செலுத்த முடியும்.  இது கண்காணிப்பு முயற்சிகளின் செயல்திறனை கணிசமாக மேம்படுத்துகிறது. 

இந்த நடவடிக்கை, குற்றங்களைத் தடுப்பதில் உதவுவது மட்டுமல்லாமல், ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பான சமூகங்களை வளர்க்கும்.  மேலும் இந்த  தொழில்நுட்பத்தின் முன்னோடி பயன்பாடு, குற்றவியல் சம்பவங்களை தடுப்பதற்கும்,  ஜாமீனில் வெளிவந்தவர்கள் அனுமதிக்கப்படாத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் இது உதவுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.