அபுதாபியில் நடைபெறும் ‘யாஸ் ஸ்பீடு பெஸ்டிவல் 2026’ (Yas Speed Festival 2026) மற்றும் ‘ஏசியன் லே மான்ஸ் சீரிஸ்’ (Asian Le Mans Series) போட்டிகளில் அஜித் தனது சொந்த ‘அஜித் குமார் ரேசிங்’ அணியின் சார்பில் பங்கேற்று வருகிறார்.
அங்கு அவரைச் சந்தித்த வெங்கட் பிரபு, அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
அஜித்தின் பிளாக்பஸ்டர் படமான ‘மங்காத்தா’ சமீபத்தில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகி (Re-release) பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
சமீபகாலமாக அஜித்தின் ரேசிங் நிகழ்வுகளுக்குத் திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ஏற்கனவே நடிகர்கள் சிவகார்த்திகேயன், சிலம்பரசன், மாதவன், நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அஜித்தைச் சந்தித்துள்ளனர். அஜித்தை ரேசிங் களத்தில் பார்ப்பது சிலிர்ப்பை (Goosebumps) ஏற்படுத்துகிறது என வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
