ஒரு விசேஷ நிகழ்ச்சியில் டிஜே இசையில் ஒரு ஆணும் பெண்ணும் நாகின் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். அந்தப் பெண் தரையில் படுத்து பாம்பு போல நெளிந்து ஆட, அந்த நபர் பெண்ணின் முழங்கால் மீது ஏறி நின்று ஸ்டைலாக ஸ்டெப் போட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பெண் பாம்பின் ‘படம்’ (Fun) எடுப்பது போல ஒரு அசைவைச் செய்ய, நிலைதடுமாறிய அந்த நபர் அப்படியே முகக்குப்புறக் கீழே விழுந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by AS_Mahto (@as_mahto40)

அவர் விழுந்த வேகத்தில் முன்பக்கப் பற்கள் உடைந்திருக்கும் என்று சொல்லும் அளவுக்கு அந்த அடி பலமாக இருந்தது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பாம்பு கடிச்சா கூடத் தப்பிச்சிரலாம், ஆனா இந்தப் பெண்ணோட படத்துல (அடி) சிக்கிப் பல்லு போயிடுச்சே” என வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.