நாடாளுமன்றத்தில் நேற்று கடும் அமளிக்கும் மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக ஏற்கனவே தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 288 எம்பிக்கள் ஆதரவாகவும் 232 எம்பிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். நேற்று நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றிய நிலையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதனை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, வக்பு மசோதாவிற்கு எதிராக பேரவைக்கு திமுக கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தது ஒரு நாடகம். சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக திமுக நாடகமாடுவதாக அவர் விமர்சித்தார்.