அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு மதிய உணவு விருந்து நிகழ்ச்சியில் மேலாளர் ஒருவர் சுவையான உணவைக் கொண்டு வந்த கையோடு தனது மடிக்கணினியை எடுத்துவர மறந்த சுவாரசியமான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சித்தார்த் மகேஸ்வரி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்தக் காணொலியில் தவறுதலாக மடிக்கணினிக்கு பதிலாக உணவுப் பையை மட்டும் கொண்டு வந்த மேலாளரைப் பார்த்து சக ஊழியர்கள் நகைச்சுவையாகக் கிண்டல் செய்வது பதிவாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Siddharth Maheshwari (@mr_nerdexy)

மடிக்கணினி இல்லாததால் அன்று பணியாற்றுவதற்கு சக ஊழியர் ஒருவர் தனது கணினியை அவருக்கு விட்டுக்கொடுத்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்த காணொலி சுமார் 20 லட்சம் பார்வையாளர்களைக் கடந்து அனைவரையும் கவர்ந்துள்ளது.

வேலைப்பளு மற்றும் மன அழுத்தங்களுக்கு இடையே தனது குழுவினருடன் இணக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் பழகும் இத்தகைய மேலாளர் கிடைப்பதற்கு ஊழியர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என இணையவாசிகள் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.