இறந்துவிட்டதாக நினைத்த மூதாட்டி மீண்டும் எழுந்து வந்து தேநீர் அருந்திவிட்டு உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த 81 வயது ஆன மூதாட்டி மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு காரணமாக மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரின் இதயம் மற்றும் மூளை செயல்பாடுகள் நின்றதால் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மருத்துவர் ரீதியாக இவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் குடும்பத்தினர் அந்த மூதாட்டியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடுகள் செய்தனர். மூதாட்டியின் உடலை தகனம் செய்ய கொண்டு செல்லும் வழியில் அவர் திடீரென எழுந்து உட்கார்ந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின்னர் அவர் உயிருடன் இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். மீண்டும் வீட்டிற்கு திரும்பிய அந்த மூதாட்டி தேநீர் தயாரித்து அருந்தியுள்ளார்.

மறுநாள் நிஜமாகவே அவர் உயிர் பிரிந்தது. இறுதி சடங்குகளை முடித்த அவர் மகன் தனது தாய்க்கு தேனீர் மிகவும் பிடித்த பானம் என தெரிவித்தார். மேலும் ஒருவர் இறந்தால் மீண்டும் எழுந்து வருவார் என்று நினைக்கும் நம்முடைய மூடநம்பிக்கையை மெய்யாக்கும் விதத்தில் இறந்து தேநீர் அருந்தி மறுநாள் உயிரிழந்த இந்த சம்பவம் இணையதளவாசிகளுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.