ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து மின் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கிருஷ்ணம்பாளையம் காலனி ஜீவா நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கூறியதாவது, வாக்கு சேகரிப்பில் கூடும் மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது முதல்வர் ஸ்டாலின் ஒன்றரை ஆண்டு ஆட்சியின் வெற்றியை காட்டுகிறது. பொள்ளாச்சி தேர்தலில் எத்தனை மாநகராட்சிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஈரோடு மாநகராட்சியில் கூட எத்தனை வார்டுகளில் அந்த கட்சி வென்றது.

அவர்களது ஆட்சியில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் மாநகராட்சி தேர்தல் நடத்தி கவுன்சிலர்கள் மக்கள் பணியாற்றும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது. வருகிற மார்ச் இரண்டாம் தேதி கை சின்னம் எத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறது என பாருங்கள் என கூறியுள்ளார். சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஒன்றரை வருடங்களில் முதல்வர் ஸ்டாலின் வழங்கிய தேர்தல் வாக்குறுதியில் இதுவரை 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். மீதமுள்ள வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசியபோது, அ.தி.மு.க ஆட்சி காலத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது தி.மு.க ஆட்சியில்தான் மின் கட்டணம் குறைவாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.